மருத்துவமனையில் பஹத் பாசில் செய்த காரியம்; கோபமடைந்த அதிகாரிகள்

Author: Sudha
1 July 2024, 1:04 pm
Quick Share

ஜித்து மாதவன் இயக்கத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஆவேசம். இதனிடையே இயக்குனர் ஜித்துவும் பஹத் பாசிலும் இணைந்து பெயின் கிளி என்கிற படத்தை தயாரித்து வருகின்றனர். ஆவேசம் படத்தில் ரங்கன் கதாபாத்திரத்திற்கு வலது கையாக அம்பானி கதாபாத்திரத்தில் ரவுடியாக நடித்திருந்த சஜின் கோபு கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

படத்தின் படப்பிடிப்பு அங்கமாலி என்கிற நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த படக்குழுவினரால் நோயாளிகளுக்கு பல்வேறு வித சிரமங்கள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது

மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை கூட படக்குழுவினர் விட்டு வைக்கவில்லை என புகார் எழுந்தது. நோயாளிகளுக்கு பல்வேறு விதமான சிரமங்கள் ஏற்பட்டது என்றும் மனித உரிமை ஆணயத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கிய சுகாதார அதிகாரிகள் என அனைவருக்கும் இது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம். தயாரிப்பாளர் சங்கமோ தாங்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு பணம் செலுத்தி உரிய அனுமதி பெற்றுதான் படப்பிடிப்பை நடத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

Views: - 49

1

0

Leave a Reply