குழந்தை பெத்துக்க கையாலாகாதவள்… 27 வருடத்துக்கு பின் விவாகரத்து செய்த கணவர் – 50 வயதில் குழந்தை பெற்ற ரேவதி!

Author: Shree
28 June 2023, 10:07 am

80ஸ்-களில் நடிகை ரேவதி இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த நவரசா ஆந்தாலஜி சீரிஸில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Revathi - updatenews360

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிகை ரேவதி நடிப்பால் அசத்தியிருக்கிறார். அப்போது தமிழ் சினிமாவில் ரேவதிக்கு அதிக மார்க்கெட் இருந்தது. ரேவதியின் சுட்டித்தனமான குணமும், அவரது சின்ன முகமும் தொடர்ந்து அவர் கதாநாயகியாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்த சமயத்தில், மற்ற கதாநாயகிகளுக்கு வரும் படங்களும் கூட பிறகு ரேவதிக்கு கைமாறிய நிகழ்வுகளும் நடந்தன.

அந்த காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வந்த நடிகை ரேவதி. தன்னுடைய கலக்கலான திரைப்படங்களை கொடுத்து வந்த நிலையில், மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். ரேவதியை சுரேஷ் சந்திரமேனன் குழந்தை இல்லாததால் தான் விவாகரத்து செய்தாராம்.

revathi-updatenews360

இதனால் மனம் நொந்துபோன ரேவதி கணவரை பிரிந்த பின்னர் டெஸ்ட்டியூப் முறையில் தனது 50வது வயதில் பெண் குழந்தை பெற்றாராம். எந்த காரணத்துக்காக கணவர் விட்டு சென்றாரோ அதை நிரூபித்து காட்டும் வகையில் பெண் குழந்தையை பெற்று மகளுடன் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நடிகை ரேவதி.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 710

    1

    0