VijayTV மட்டுமில்லாமல்.. அந்த தொழில் மணிமேகலைக்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம்..!
Author: Vignesh26 April 2024, 12:28 pm
பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜொலிக்க ஆரம்பித்தார். ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, உசைன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார்.

மேலும் படிக்க: உச்ச நடிகையின் Ex காதலருடன் டேட்டிங்… காதலை ஒப்புக்கொண்ட நடிகை பிந்து மாதவி..!
அதன் பிறகு சொந்தமாக யூடியூப் சேனல் துவங்கி நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தார். கணவர் ஹூசைனுடன் சேர்ந்து தினசரி நடப்பவற்றை வீடியோ எடுத்து, யூடியூபில் போட்டது பெரும் வரவேற்பை பெற்று கிடுகிடுவென வளர்ந்துவிட்டார்கள்.

மேலும் படிக்க: ஃபேன் Girl சம்பவம்… அச்சு அசல் நயன்தாரா போல் மாறிய ரசிகை..! வைரலாகும் வீடியோ..!
இந்நிலையில், புதிய கார்கள், வீட்டுமனை வாங்குதல், வீடு கட்டுவது என மணிமேகலை படிப்படியாக முன்னேறியுள்ளார். அவருக்கு மிகவும் கை கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சி தான். தொலைக்காட்சி மூலம் சம்பாதிக்கும் மணிமேகலை சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. ஒரு பேட்டியில் நடிகை மணிமேகலை தனது மாத செலவு மட்டுமே, 40- 45 ஆயிரம் ஆவதாக கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இவரது யூடியூப் வருமானம் மட்டும் கிட்டத்தட்ட 59 ஆயிரம் மாதம் வருமானம் வருவதாக பிரபலங்களின் யூடியூப் வருமானங்களை வெளியிடும். youtube பிரபலம் ராபி தெரிவித்து இருக்கிறார்.