அரவிந்த் சாமி பிறந்த உடனே தத்து கொடுத்துட்டேன்….காரணத்தை கூறி அதிரவைத்த டெல்லி குமார்!

அரவிந்த்சாமியின் அழகில் மயங்காத பெண்களே கிடையாது என்று கூறும் அளவுக்கு எவர் கிரீன் ஹீரோவாக இன்றளவும் திகழ்ந்து வருகிறார். இவர் முன்னதாக பொழுதுபோக்கிற்காக மாடல் துறையில் நுழைந்தார். முதன்முதலாக இவர் நடித்த காபி விளம்பரத்தை பார்த்த இயக்குனர் மணிரத்தினம் தளபதி படத்தில் பெரிய ஸ்டாராக வலம் வந்த ரஜினியின் தம்பியாக நடிக்கும் அதிர்ஷ்டத்தை கொடுத்தார்.

aravind samy-updatenews360aravind samy-updatenews360

இதனிடையே, ஆண் அழகன் அரவிந்த் சாமி சாக்லேட் பாய் ஆக பம்பாய் படத்தின் மூலமாக அத்தனை பெண் ரசிகர்களையும் வளைத்து போட்டார். இவர் 1991ம் ஆண்டு தளபதி படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். தொடர்ந்து ரோஜா, மின்சார கனவு, அலைபாயுதே, என் சுவாசக் காற்றே, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும். கதாபத்திரங்கள் தேர்வு செய்வதில் அதிகம் கவனம் செலுத்தும் அவர் வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. குறிப்பாக இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.

aravind samy-updatenews360aravind samy-updatenews360

இவர் காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு 16 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு அபர்ணா முகர்ஜி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவருக்கு ருத்ரா,ஆதிரா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அரவிந்தசாமியின் தந்தை பிரபல சீரியல் நடிகர் டெல்லி குமார் தான் என்ற செய்தி அவ்வப்போது வெளியாகி வைரலாகும். ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து எந்த ஒரு படத்திலோ, பெரிதாக பொது நிகழ்ச்சிகளிலோ கலந்துக்கொண்டதை நாம் பார்த்திருக்க மாட்டோம்.

ஆம், இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் டெல்லி குமார். ஆம், வெளிவரும் செய்திகள் எல்லாமே உண்மை தான் அரவிந்த் சாமி என்னுடைய மகன் தான். அவர் பிறந்த உடனேயே என்னுடைய மனைவியின் சகோதரிக்கு அவரை தத்துக்கொடுத்துவிட்டேன். பின் அரவிந்த் அந்த குடும்பத்தோடு ஒன்றிவிட்டார். எப்போவாச்சும் பேமிலி Functionகளில் கலந்துக்கொள்ளவார் அப்போ மட்டும் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என டெல்லி குமார் அந்த பேட்டியில் கூறினார்.

Ramya Shree

Recent Posts

தனுசுக்கு கதை ரெடி…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சுவாரசிய அப்டேட்.!

தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…

5 hours ago

‘பவுன்டரி டூ பாக்ஸ் ஆபிஸ்’..மிரட்டும் வார்னர்..ராபின்ஹுட் படத்தின் ரிலீஸ் தேதி லாக்.!

‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…

5 hours ago

விஜய் செய்தது போல், சினிமா தயாரிப்பதில் இருந்து உதயநிதி விலக வேண்டும் : இயக்குநர் பேரரசு!

இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…

7 hours ago

நீ இந்தியாவுக்கு வந்த அவ்வளவு தான்…தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு மிரட்டல்.!

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…

7 hours ago

படத்தோட பேரு தெரியாம நடிச்சேன்.. ‘பெருசு’ பொருத்தமான தலைப்பு.. ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகர் பேட்டி!

பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…

7 hours ago

27 தடவை..தங்க கடத்தலுக்கு உதவியது யார்? அதிகாரிகளை திணறடித்த நடிகை ரன்யா ராவ்.!

தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…

8 hours ago