ராஷ்மிகாவை விட நான் தான் பெஸ்ட்.. ஸ்ரீவள்ளியா நான் நடிச்சிருக்கலாம் : நடிகை வருத்தம்!
Author: Udayachandran RadhaKrishnan22 March 2025, 8:19 am
சுகுமார் இயக்கத்தில் 2021ல் வெளியான படம் புஷ்பா. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்த இந்த படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்தது. ரூ.250 கோடியில் உருவாக்கப்பட்ட படம் 400 கோடி வரை வசூல் செய்தது.
புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூன் மிரட்ட, ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா நடித்திருப்பார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் பாடல்கள் பட்டி தொட்டி ஹிட் அடித்தது. குறிப்பாக சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா பாடல் அல்டிமேட்.
இதைத்தெடர்ந்து புஷ்பா 2 கடந்த 2024 டிசம்பர் மாதம் வெளியாகி மரண ஹிட் அடித்தது. குறிப்பாக படம் 1800 கோடி ரூபாய் வரை வசூலித்து உலகமே இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது.
முதல் பாகத்தில் பாடல்களை ஒப்பிடும் போது இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் குறைவு தான் என்றாலும் படத்திற்கு வடமாநிலங்களில் பயங்கர வரவேற்பு காரணமாக பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த நிலையில் ராஷ்மிகாவுக்கு பதில் நான் நடித்திருந்தால் இன்னும் ஸ்ரீ வள்ளி கேரக்டர் அழுத்தமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
புஷ்பா படத்தில் நான் நடித்திருக்கலாமோ என்ற எண்ணம் அவ்வப்போது வரும். ராஷ்மிகாவை விட ஸ்ரீ வள்ளி கேரரக்டருக்கு நான் பொருத்தமாக இருந்திருப்பேன் என கூறியுள்ளார்.