விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?
Author: Udayachandran RadhaKrishnan25 March 2025, 6:36 pm
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளதாக அறிவித்துள்ளார். தனது 69வது படம்தான் கடைசி என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இது மட்டுமல்லாமல், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டினார். மேலும் விஜய் நடிக்கும் கடைசி படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியானது.
இதையும் படியுங்க: மெகா குடும்பத்தின் மருமகளாகிறார் பிரபல நடிகை… திருமணம் செய்து வைக்க தடல்புடல் ஏற்பாடு!
படத்தின் பெயர் ஜனநாயகன் என்றும், படத்தில் நடிப்பவர்கள் குறித்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியானது. அரசியலுக்குள் விஜய் நுழைய இருக்கும் நிலையில் இந்த படம் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. ஏற்கனவே இந்த படம் 2025 அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்ப்டடது.
ஆனால் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் படம் 2026 பொங்கலன்று வெளியாகும் என கூறப்பட்டது. பொங்கல் ரேசில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகயேன்,ஸ்ரீலீலா, அதர்வா, ஜெயம் ரவி நடிக்கும் இந்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சமீபத்தில வெளியான கோட் திரைப்படத்தில் விஜய்யுடன், கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோத உள்ளதாகவும், சிவகார்த்திகயேன் வேண்டுமென்றே விஜய்யுடன் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.
ஆனால் சிவகார்த்திகயேன், விஜய்யுடன் மோதவே மாட்டார். அவர் ஏற்கனே இது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என நெட்டிசன்கள் பதிலுக்கு ஒரு வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

அந்த வீடியோவில், விஜய் சாருடன் போட்டி போட முடியாது. அவங்கெல்லாம் பெரிய ஸ்டார்ஸ். என்னோட படத்துக்கு நல்ல லீவு நாள்லி ரிலீஸ் செய்ய திட்டம்தானே தவிர, சில தயாரிப்பாளர்களால் தேதி மாறும். ஆனால் நான் அவருடன் போட்டி போடவும் மாட்டேன். அதற்கான தகுதி எனக்கில்லை எனவும் கூறியுள்ளார்.
Dear #Thalapathy anna fans this is producer call ! #SK had huge respect on #vijay sir so don’t trust thideer sk fans they are not real sk fans ! #JanaNayagan #Parasakthi pic.twitter.com/4ksyMegSqr https://t.co/X5bryb5vl9
— A L P H A (@Venkatsinivasan) March 24, 2025
இந்த வீடியோ பழையதாக இருந்தாலும், சிவகார்த்திகயேனின் எண்ணமும் இதுவாகத்தான் இருக்கும் என இணையத்தில் கருத்துக்கள் பரவி வருகிறது.
