கட்டிலில் சிறுவனிடம் ஏமாந்துட்டேன்… புலம்பி தவிக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே!

Author:
17 August 2024, 11:26 am

மேகா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான் சிருஷ்டி டாங்கே. முன்னதாக காதலாகி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. தொடர்ந்து எனக்குள் ஒருவன், ஜித்தன் 2 , தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், சந்திரமுகி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஸ்ருஷ்டி நடித்திருக்கிறார்.

srushti dange - updatenews360

மேலும் குக் வித் கோமாளி, சர்வைவர் உள்ளிட்ட நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் கட்டில் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து சிருஷ்டி டாங்கே சமீபத்திய பேட்டி ஒன்றில் கட்டில் திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசினார்.

அந்த படத்தில் ஒரு சிறுவன் நடித்திருந்தான். அவன் ரொம்ப துரு துருன்னு நல்ல திறமையை வெளிப்படுத்தி நடித்து வந்தான். ஆனால் அவன் கிட்ட ஏமாந்து போனேன். பல நாட்களுக்குப் பிறகுதான் எனக்கு அது தெரியவே வந்தது. அது என்னன்னா அவன் சிறுவன் இல்ல….சிறுமி இயக்குனர் கணேஷ் பாபுவின் மகள்தான்.

அவள நான் முதல்ல இருந்தே பையன் என்று தான் நினைச்சுட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம் தான் அது பொண்ணு குழந்தை அப்படிங்கறதே எனக்கு தெரிய வந்துச்சு. ரொம்ப திறமையான பொண்ணு அவ…..இப்ப இருக்குற சிறுவர்கள் எல்லாமே ரொம்ப திறமைசாலியா இருக்காங்க என்று சிருஷ்டாங்க கூறினார்.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?