17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!
Author: Udayachandran RadhaKrishnan5 April 2025, 2:25 pm
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்தார்.
இதையும் படியுங்க: பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…
ஆனால் இயக்குநருடன் காதல் வயப்பட்டடு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி ஒரு வருடத்திலேயே பிரிந்து விவாகரத்தும் பெற்றது.
இதையடுத்து சினிமாவில் ஜொலிக்க முடியாத அமலாபால், தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். ஆடை படம் மூலம் ஆடையில்லாமல் வித்தியாசமாக நடித்தது வரபேற்பை பெற்றது.

பின்னர் ஜெகத் தேசாய் எனபவரை காதலித்து 2வது திருமணமும் ச்யது கொண்ட அவருக்கு இலை என்ற ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது அவர் தனது 17 வயதில் சிந்து சமவெளி படத்தில் நடித்து குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், சிந்து சமவெளி படத்தில் மாமனாரை விரும்பும் மருமகளாக நடித்தது என் வாழ்நாளில் நான் பல கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது. என் குடும்பத்தினர் அடைந்த வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
என்னைவிட பாதிக்கப்பட்டது என் அப்பா தான். ரொம்ப வருத்தப்பட்டார். இதனால் நான் மைனா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கூட தலைகாட்டவில்லை என கூறியுள்ளார். சிந்து சமவெளி படம் வெளியாக பல சர்ச்சகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.