அந்த தப்பு பண்ணிட்டு இரண்டு மாதம் அழுதேன் – வேதனை பகிர்ந்த நடிகர் விக்ரம்!

Author:
11 October 2024, 2:37 pm

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நட்சத்திர நடிகராக இருப்பவர் தான் விக்ரம். இவர் குறிப்பாக எப்பேற்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மெனக்கட்டு நடித்து தன்னுடைய கேரக்டருக்கு பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பார்.

கடந்த 1999 இல் சேது திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான இவர் தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி , பிதாமகன், ஜெமினி, கிங், அந்நியன், கந்தசாமி ,இராவணன் ,தெய்வத்திருமகள், தாண்டவம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக தற்போது இருந்து வருகிறார் .

கடைசியாக இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகர் விக்ரம் சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் தான் நடிக்க வந்த புதிதில் பல்வேறு நல்ல திரைப்பட வாய்ப்புகள் தன் கைமீறி போனதாக கூறி வேதனையை பகிர்ந்துள்ளார்.

ஆம் அரவிந்த்சாமி மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் தான் பாம்பே. இத்திரைப்படத்தில் முதலில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு தான் கிடைத்தது. ஆனால், அதை நான் தவற விட்டு விட்டேன். என கூறி வேதனை பகிர்ந்தார். அதாவது, மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு வந்தபோது “புதிய மன்னர்கள்” படத்திற்காக நான் தாடி வளர்த்திருந்ததால் ஷேவ் செய்ய மறுத்துவிட்டேன்.

இதையும் படியுங்கள்: எங்க போய் சொல்ல இந்த கொடுமையை? கட்டின மனைவி காரி துப்புறாங்க – அசிங்கப்பட்டார் அர்னவ்!

vikram

அதனால் பாம்பே திரைப்படத்தின் வாய்ப்பு எனக்கு பறிபோனது. இந்த திரைப்படம் நடிகர் அரவிந்த்சாமியின் கைக்கு சென்று மாபெரும் ஹிட் அடித்த பிறகு நான் அந்த படத்தின் வெற்றியை நினைத்து தவறவிட்டதை நினைத்து இரண்டு மாதங்கள் தொடர்ந்து அழுதேன் என வேதனை பகிர்ந்து இருக்கிறார் நடிகர் விக்ரம். இன்று அவர் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக முன்னணி நட்சத்திர அந்தஸ்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?