விஜய் அப்படி சொல்லுவார்னு நினைக்கல… மறக்கவே முடியாத விஷயத்தை கூறிய கீர்த்தி சுரேஷ்!

Author: Shree
4 September 2023, 4:37 pm

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழியில் முன்னணி நடிகையாக தற்போது கீர்த்தி சுரேஷ் ஜொலித்து வருகிறார். இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார். அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மாமன்னன் படத்தை தொடர்ந்து கண்ணிவெடி என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யவுள்ள தெறி படத்தில் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளாராம்.

இதனிடையே நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷை ரகசியமாக காதலித்து வருவதாகவும். அவரால் தான் மனைவி சங்கீதா பிள்ளைகளை கூட பிரிந்து வாழ்வதாகவும் வதந்தியாக செய்திகள் வந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு இருவருமே ரியாக்ட் செய்யாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் சர்க்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கீர்த்தி சுரேஷ் பற்றி பேசிய விஜய் மகாநடி படத்தில் கேத்தி சுரேஷின் நடிப்பு குறித்து பாராட்டி பேசியிருந்தார்.

அதுகுறித்து கீர்த்தி சுரேஷிடம் கேட்டதற்கு, நான் சத்தியமாக விஜய்யிடம் இருந்து அதை எதிர்பார்க்கவே இல்லை. அவர் அப்படி பாராட்டவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அவர் பேசாமல் கூட இருந்திருக்கலாம். நம்ப முடியாத அந்த தருணத்தை இன்று வரை என்னால் மறக்கவே முடியவில்லை என கீர்த்தி சுரேஷ் அந்த பேட்டியில் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ