நான் முட்டாள் ஆகிட்டேன்… எதுக்கு அந்த படத்தில் நடிச்சேனு தெரியல – “பேட்ட” வில்லன் வருத்தம்!

Author: Rajesh
17 February 2024, 5:00 pm

பாலிவுட் சினிமாவில் கேரக்டர் ரோல் , வில்லன் ரோல் என நடித்து நட்சத்திர நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இவர் 2010ஆம் ஆண்டு ஜைனப் எனும் ஆலியா அஞ்சனாவை 2ஆவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே மனையுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் பிரிந்து வாழ்ந்து சட்டரீதியான சிக்கலை சந்தித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்தது குறித்து பேசிய அவர், நான் நடித்து ஒரு படம் வெளியான பிறகு அந்த படத்தில் நான் ஏன் நடித்தேனோ என நினைத்து நான் வருந்திய திரைப்படம் ரஜினியின் பேட்ட படம் தான்.

ஆம், நான் அந்த படத்தில் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாமல் நடித்தேன். நான் அங்கு வெறுமனே வாயசைத்துக் கொண்டுதான் இருந்தேன். அந்த படத்தில் வெறும் பணத்திற்காக நடித்ததாக எனக்கு எண்ணம் தோன்றியது. மிகுந்த குற்ற உணர்ச்சியாக இருந்தது. பணம் மட்டும் பெற்றுக்கொண்டு நான் அவர்களை முட்டாளாக்கிவிட்டேன் என நினைத்து வருந்தினேன் என நவாசுதீன் சித்திக் மிகுந்த வருத்தத்துடன் கூறினார்.

  • Tamil actors playing villains and heroes தனுசுடன் மோத ரெடி..வில்லனாக மாறும் பிரபல ஹீரோ… “இட்லிக்கடை” படத்தின் அப்டேட்….
  • Views: - 260

    0

    0