விஜய்யிடம் பேசுவது இல்லை.. அவர் படத்தை பார்ப்பதும் இல்லை : பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!
Author: Udayachandran RadhaKrishnan11 March 2025, 7:01 pm
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அடுத்தடுத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இதையும் படியுங்க: ‘ஜனநாயகன்’ படத்தில் களமிறங்கும் முக்கிய இயக்குனர்கள்…விஜய் போட்ட ஸ்கெட்ச்சா.!
இந்த நிலையில் விஜய்யிடம் நான் பேசுவதை நிறுத்திவிட்டேன், அவருடைய படங்களை நான் பார்ப்பதில்லை என நடிகர் நெப்போலியன் கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசிய அவர்,. நடிகர் விஜய்க்கும் எனக்கும் போக்கிரி படத்தில் பணியாற்றிய போது சின்ன மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால் இதுவரை நானும் பேசவில்லை, அவரும் பேசவில்லை. அவருடைய படங்களை நான் பார்ப்பதும் கிடையாது என ஓபனா பேசினார்.

நடிகர் நெப்போலியன், திமுகவில் இணைந்து எம்எல்ஏவாக தேர்வானது மட்டுமல்லாமல், சில காலம் பாஜகவில் இணைந்து பணியாற்றினார, மேலும் திமுக அமைச்சரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.