அந்த சம்பவத்திற்கு பிறகு வாழவே பிடிக்கல… கணவரை பிரிந்து 25 வருடமாகியும் தவிக்கும் நளினி!

Author: Rajesh
2 January 2024, 6:28 pm

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் 80 -களில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை நளினி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘ராணுவ வீரன்’ படத்தின் மூலம் நடிகை நளினி தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். நடிகை நளினி மீது ராமராஜன் உதவி இயக்குனராக இருக்கும் போதே ஒருதலைக் காதல் இருந்ததாம். இந்த விஷயம் நளினி குடும்பத்திற்கு தெரியவந்ததால் ராமராஜனை பிடித்து அடித்துவிட்டனர்.

nalini-updatenews360

இந்த சம்பவம் பூதாகரமான நிலையில், நளினி தமிழ் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் ஒரு வருடம் கழித்து சென்னைக்கு வந்த நளினி, ராமராஜனை திருமணம் செய்து கொண்டு, நன்றாக போய் கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணத்தால் 2000 -ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

Ramarajan nalini - updatenews360

விவாகரத்து ஆனாலும் நடிகை நளினி பல்வேறு பேட்டிகளில் தனது கணவர் குறித்து மிகுந்த மரியாதையோடு பேசுவார். அந்தவகையில் ராமராஜன் உடனான விவாகரத்து குறித்து பேசிய அவர், எனக்கு மகளிர் தினத்தன்று விவாகரத்து கிடைத்தது. அந்த நாள் என்னால் மறக்கவே முடியாது. எந்த ஒரு பெண்ணிற்கும் அதுபோன்ற ஒரு நிலை வந்திடவே கூடாது.

nalini-updatenews360

அந்த இக்கட்டான சூழ்நிலையில் என்னால் எந்த ஒரு முடிவும் எடுக்கமுடியாமல் வாழவே முடியவில்லை. உயிருடன் இருக்கவே பிடிக்காமல் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்தேன். பின்னர் என் குழந்தைகளுக்காக என் முடிவை மாற்றிக்கொண்டேன். நாங்கள் பிரிந்து 25 வருடம் ஆகியும் என் கணவர் இடத்தில் யாரையும் வைத்து பார்க்கவே முடியவில்லை என்றார் நளினி. இவ்வளவு காதலை வைத்துக்கொண்டு ஏன் பிரிந்தீர்கள்? கடைசி காலத்திலாவது சேர்ந்துவிடுங்கள் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 400

    0

    0