தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
மேலும், விஜயகாந்தை புதைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இப்படியான நேரத்தில் விஜயகாந்த் செய்த பல நற்செயல்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் அஜித் மற்றும் விஜயகாந்திற்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு எடுக்க திரையுலக நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மலேசியாவிற்கு அழைத்து சென்றார் சென்ற விஜயகாந்த் அங்கு மிகப்பெரிய அளவில் விழா நடத்தி நிதி திரட்டினார். அந்த விழாவிற்கு ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் என தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
ஆனால், நடிகர் அஜித் அந்த விழாவில் கலந்துக்கொள்ளவில்லை. இதனால் அஜித் மீது கடுங்கோபம் அடைந்த விஜயகாந்தை நேரில் சந்தித்து ஒரு தொகை கொடுத்துள்ளார் அஜித். ஆனால், விஜயகாந்த் அதை வாங்க மறுத்து நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் எங்களுக்கு கிடைத்துவிட்டது ” உங்க காசு எனக்கு வேணாம்” என முகத்தில் அடித்தாற்போல் கூறினாராம்விஜயகாந்த்.
பின்னர் அஜித் தனக்கு ஷூட்டிங்கின் போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆப்ரேஷன் செய்து ஓய்வெடுத்திருந்ததால் தான் தன்னால் வரமுடியவில்லை என சட்டையை கழட்டி தனது முதுகை காட்டியவுடன் விஜயகாந்த் கண்ணீர்விட்டு அழுது என்னை மன்னித்துவிடு தம்பி என்றாராம். அதன் பின்னர் அவர் கொடுத்த பணத்தை மனசார வாங்கிக்கொண்டு வாழ்த்தினாராம் கேப்டன்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.