அந்த காட்சியில் கால் உதறல் எடுத்துடுச்சி – கமல் ஹாசன் உடன் நடித்தது குறித்து ரம்யா கிருஷ்ணன் பகீர்!

Author: Rajesh
12 February 2024, 3:14 pm

தமிழ் சினிமாவில் 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு போதிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இவர் பல ஆண்டுகள் கழித்து படையப்பாவின் நீலாம்பரியாக நடித்தது மிகப் பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்தது.

அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர். இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது. தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

kamal hassan

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பஞ்ச தந்திரம் திரைப்படத்தில் கமல் ஹாசனுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த படத்தின் ஒரு காட்சியில், கமல் ஹாசன் என்னை சுவற்றில் வைத்து அழுத்தி நடிக்கவேண்டிய காட்சிகளை பக்காவாக செய்தார்.

ஆனால் எனக்கு தான் கால் உதறல் எடுத்து விட்டது. கமல் ஹாசன் போன்ற லெஜெண்ட்டுடன் இந்த காட்சியில் எப்படி நடிப்பது என்ற பயத்துடனே அந்த காட்சியில் நடித்தேன். ஒரு வழியாக அந்த சீன் சிறப்பாக வந்திருந்தது என ரம்யா கிருஷ்ணன் கூறினார். நடிகை ரம்யா கிருஷ்ணன் பஞ்சதந்திரம் திரைப்படத்தில் விலை மாதுவாக மேகி என்ற ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 440

    0

    0