தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் திரை பின்பலம் எதுவுமே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனது திறமையாலும் கனவாலும் இன்று திரைத்துறையில் நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். முதன் முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆனார்.
இவர் தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலில் 2012 ஆம் ஆண்டு மெரினா திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.
பின்னர் தனுஷ் உடன் 3 படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. தொடர்ந்து மனங்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன், காக்கிசட்டை, மான்கராத்தே, வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை, மாவீரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து இன்று நட்சத்திர நடிகராக முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார்.
தற்போது சிவகார்த்திகேயன் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூரி நடிப்பில் உருவாகி வரும் “கொட்டுக்காளி “என்ற திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன்களில் பங்கேற்று வரும் சிவகார்த்திகேயன் சமீபத்தை பேட்டி ஒன்றில்…” நான் சினிமாவை விட்டு என்றைக்கோ விலகி இருப்பேன்.
இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம் என்னுடைய மனைவி தான். நான் சம்பாதித்த பணத்தை வீடு வாங்கலாம் என்று சொல்லாமல் படம் தயாரிக்கலாம் என கூறினார். அப்படித்தான் “கொட்டுக்காளி” படத்தை தயாரிக்க முக்கிய காரணமாக என்னுடைய மனைவி அமைந்தார். எனவே அவர் கூறிய வார்த்தைக்கு கட்டுப்பட்டு நான் “கொட்டுக்காளி ” படத்தை தயாரித்திருக்கிறேன். இந்த திரைப்படம் தயாரித்ததில் எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.