தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக ஒரு ரவுண்ட் அடித்து வெற்றி நடிகராக பெயரெடுத்தவர் நடிகர் ஜெய். இவர் விஜய் நடித்த பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சென்னை 600028, சுப்பிரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து மார்கெட் பிடித்தார். இப்படியே போயிருந்தால் சார் வாழ்க்கையில் முன்னேறியிருப்பார்.
ஆனால், வழிமாறி நடிகைகளின் வாசத்தை நுகர்ந்த இந்த நடிகர் அவருடன் நடித்த நடிகை அஞ்சலியை காதல் வலையில் வீழ்த்தி சில வருடம் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து நடிகையை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். இப்படியே போனால் நம்ம வாழ்க்கை நாசமாகிடும் என எண்ணிய அந்த நடிகை அவரை பிரிந்து செல்ல உடனே நடிகர் ஜெய் வாணிபோஜனை தன் காதல் வலையில் வீழ்த்தினார். இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது.
பின்னர் வாணி போஜனும் விட்டுச்செல்ல மிகுந்த விரக்திக்கு ஆளான ஜெய் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடைசியாக நயன்தாராவுக்கு ஜோடியாக அன்னபூரணி படத்தில் நடித்துள்ளார். அதே போன்று நடிகை அஞ்சலியும் தனது சினிமா கேரியரில் மீண்டும் கவனத்தை செலுத்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜெய் உடனான காதல் கிசு கிசு பற்றிய பேசிய அஞ்சலி,
நான் ஜெய்யை காதலிப்பதாக எங்கும் சொன்னதே கிடையாது. எங்கேயும் காதல் படத்தில் ஜோடியாக நடித்ததில் இருந்தே நாங்கள் இருவரும் கிசுகிசுக்கப்பட்டோம். பின்னர் பலூன் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்ததால் நாங்கள் காதலிப்பதாக அவர்களாகவே முடிவு செய்துவிட்டார்கள். அத்தோடு நிறுத்தாமல், நான் ஜெய்யை காதலித்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன் என்றெல்லாம் செய்திகள் வெளிவரும் அதை பார்த்தால் ஒரே சிரிப்பு தான் வரும். மேலும் அதை நான் மறக்க நினைக்கிறேன் என்று கூறி பேச்சை முடித்தார் அஞ்சலி.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.