அதுக்குள்ள இப்படியா..? 2வது திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை : முதல் கணவனை அண்ணா என கூப்பிட்ட கொடூரம்..!!
Author: Vignesh14 March 2023, 11:30 am
ராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவுடன் காதலாகி அதன் பின் திருமணம் ஆனது, தற்போது இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்தது உலகறிந்தது.
காலப்போக்கில், ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. மேலும், இவர்கள் நடித்த ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அதிகம் இருந்தது.
ஆல்யா மானசா நடிகை மட்டுமல்ல, டான்ஸர், தொகுப்பாளர், யூடியூப்பர் என பல திறமையுள்ளவராக காணப்படுகிறார்.
இவ்வாறு இருக்கையில் சன் டிவியில் ஒளிப்பராகும் இனியா சீரியலில் ஆல்யா மானசா நடித்து வருகின்றார். இந்த சீரியலில் ஷீட்டிங்கிற்கு வந்த சஞ்சீவ் ஆல்யாவிற்கு “ஹாய்” சொல்லும் போது, ஆல்யா பதிலுக்கு “ஹாய் அண்ணா” எனக் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதனால் கடுப்பான நடிகர் சஞ்சீவ் “அண்ணாவா..” என கேட்டநிலையில், “ஆமா, எனக்கு இந்த சீரியலில் வேறொருவருடன் திருமணம் முடிந்து விட்டது” என கிண்டலாக பதிலடித்துள்ளார்.
எனினும் இதனை தொடர்ந்து நடிகர் சஞ்சீவ், ஆல்யாவை தனியாக விட்டு விட்டு படம் பார்க்க போவதாக கூறி பதிலுக்கு இவரும் ஆல்யா மானசாவை கடுப்பாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோக்காட்சி சஞ்சீவ் – ஆல்யா நடத்தி வரும் யூடியூப் சேனலில் போடப்பட்டுள்ளது.