சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கடன் வாங்கல… விமர்சனத்திற்கு விளக்கம் கொடுத்த ரவீந்தர்!

Author: Shree
27 October 2023, 6:11 pm

தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் மகாலட்சுமி. அழகான பப்ளி முகம், பொம்மை போன்ற தோற்றம் கொண்டும் சீரியல்களில் வில்லியாக நடித்தது தான் அனைவரையும் கவர்ந்தது. இவர் அனில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தை பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடித்து ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக ஈஸ்வரின் மனைவி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.

அதன் பின்னர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விமர்சித்ததன் மூலம் மக்களிடையே பேமஸ் ஆனார். அது மட்டுமல்லாமல் நடிகை வனிதாவின் மூன்றாம் திருமணத்தை வச்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

mahalakshmi-raveendar-updatenews360

ரவீந்திரன் – மகாலக்ஷ்மி ஜோடி தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகினர். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தங்களது வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. ஆம், தயாரிப்பாளர் ரவீந்திரன் சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை அதிரடியாக கைது செய்து சமீபத்தில், ரவீந்தரை பணமோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதையடுத்து அண்மையில் இவர் ஜாமினில் விடுதலை ஆகி உள்ளார். இதனிடையே, சமூக வலைதளங்களில் ரவீந்தர் மகாலட்சுமியை விவகாரத்தை செய்யப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

raveendar mahalskhmi

ஜெயிலில் இருந்து வெளியில் வந்ததும் அந்த மோசமான அனுபவத்தை குறித்தும், மனைவி மகாலக்ஷ்மி கொடுத்த தைரியத்தை பற்றியும் பேட்டியளித்தார் ரவீந்தர். அப்படி ஒரு பேட்டியில் ” நான் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கடன் வாங்கல… நாலு படம் தயாரிச்சு Loss ஆகிடுச்சு” என விளக்கம் அளித்துள்ளார். இதனை நெட்டிசன்ஸ் வழக்கம் போலவே ” கல்யாணத்துக்கு முன்னாடி கடன் இருக்கு என்று சொல்லி இருந்தால் மஹா கல்யாணமே பண்ணியிருக்கமாட்டாங்கன்னு தானே இப்படி ஒரு பிளான்” என்றெல்லாம் மோசமாக விமர்சித்து தள்ளியுள்ளனர். இதோ அந்த வீடியோ:

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 305

    1

    0