17 வருஷமா அஜித் கூட இருக்கேன்.. ஆனா அத மட்டும் அவருகிட்ட இருந்து வாங்க முடியல : ஓபனாக பேசிய பிரபல நடிகை!!
Author: Udayachandran RadhaKrishnan1 February 2023, 4:15 pm
17 வருடம் அஜித் உடன் இருந்தும் அவரிடம் இருந்து அதை வாங்க முடியவில்லை என பிரபல நடிகை ஓபனாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நடிகைகள் பலர் உண்டு.
ஆனால் திரிஷா அதில் வேற ரகம். ஆரம்பத்தில் தற்போது வரை பிஸியாக படப்பிடிப்பில் இருந்து வரும் ஒரே நடிகை. 2002ல் இருந்து தற்போது வரை 20 வருடங்களாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் அஜித்துடன் முதல் முறையாக 2005ஆம் வெளியான ஜி படம் மூலம் இணைந்தார். அதன் பின், கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் அஜித்துடன் ஜோடி போட்டு நடித்துள்ளர்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த திரிஷா, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படம் மூலம் விஜய்யுடன் 14 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய திரிஷாவிடம், நடிகர்களை நீங்கள் எந்த பெயரை வைத்து அழைப்பீர்கள், உங்கள் செல்போனில் அவர்களுடைய பெயர் என்ன தொகுப்பாளர் கேள்வி கேட்டிருப்பார்.
அதில் பதிலளித்த திரிஷா, தனுஷை D என்றும் பிரபு என்ற நிஜ பெயரை வைத்து அழைப்பதாக கூறினார். பின்னர் விஜய் என்று தொகுப்பாளினி கேட்க, அவரை நாங்கள் சீட்டா என்று தான் அழைப்போம்.
அஜித் பற்றி கேட்க, அஜித் சார் ஓட நம்பர் என்கிட்ட இல்ல, அவர் அவ்வளவு போன் பயன்படுத்தி நான் பார்த்ததே இல்ல.. அவர் நிஜத்தில் ஒரு ஜென்டில்மேன் என கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை அஜித் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.