கொரோனா பாதிப்பில் இருந்த போது நடிகைகளுடன் லிப் லாக் அடித்தேன் : ஷாக் கொடுத்த பிரபல நடிகர்!!
Author: Udayachandran RadhaKrishnan22 March 2022, 2:12 pm
சென்னை 28, பிரியாணி, மங்காத்தா, மாநாடு என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு, மன்மத லீலை என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, ரியா சுமன், சம்யுக்தா, ஸ்மிருதி வெங்கட் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 1ம் தேதி இந்த படம் தியேட்டரில் ரிலீசாக உள்ளது.
இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாயகன் அசோக் செல்வன் பேசும் போது, வெங்கட் பிரபு படங்களை எல்லாமே எனக்கு ரொம்ப புடிக்கும், தற்போது அவருடன் பணியாற்றுவது கனவு நனவானது போல உள்ளது என கூறினார்.
மேலும் மன்மதலீலை படத்தை வேகமாக எடுத்து முடித்துவிட்டார். நடுவுல கொரோனா எல்லாம் வந்தது. அப்போது எனக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்துல லிப்லாக் சீன்ல எல்லாம் நடித்தேன், ஹீரோயின்களுக்கு எதுவும் ஆகல.
டீசர் ரிலீஸ் ஆன நேரத்துல ஏன் இந்த மாதிரி படம் பண்றீங்க என என்னிடம் நிறைய பேர் கேட்டாங்க.. ஆனா எனக்கு கதை பிடித்திருந்தது, இதில் எந்தவிதமான தவறான விஷயங்களும் இல்ல என கூறினார்.