அந்த ஆபாச நடிகை ரொம்ப பிடிக்கும் – பட்டென சொன்ன நக்ஷத்திரா நாகேஷ்!

Author: Shree
16 November 2023, 5:43 pm

வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ராகவ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நக்ஷத்திரா நாகேஷிடம் ஆபாச நடிகைகளில் உங்களுக்கு சன்னி லியோனை பிடிக்குமா?ஷகிலாவை பிடிக்குமா? என கேட்டதற்கு எங்கு சன்னியை தான் பிடிக்கும் காரணம். அவர் அந்த மாதிரியான நடிகை என்பதை விட மிகச்சசிறந்த மனுஷி. பெண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளிகளுக்கு கோடி கணக்கில் நன்கொடை கொடுக்கிறார். 300-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களை தத்தெடுத்து அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுள்ளார். அத்துடன், புற்று நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார் எனவே சன்னியோனிடம் நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியிருக்கு. எனக்கு அவரை தான் பிடிக்கும் என்றார் நக்ஷ்த்திரா.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி