அந்த பிரபலத்துடன் வைத்த தவறான உறவால் என்னோட கேரியரே காலி ஆயிடுச்சு : புலம்பும் நடிகை அஞ்சலி!!!
Author: Udayachandran RadhaKrishnan27 December 2022, 5:16 pm
2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான போட்டோ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த அஞ்சலி, கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடித் தெரு, ரெட்டை சுழி, மகிழ்ச்சி. தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும் வத்திக்குச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி தற்போது ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆர்சி 15 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.
இந்நிலையில் நடிகை அஞ்சலி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார்.
அந்த நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கெரியரை கவனிக்க முடியாமல் போனதால் அந்த உறவு தவறான உறவு என தெரிவித்துள்ளார்.
கேரியருக்கு தடையாக இருக்கும் உறவை விட கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் சிறந்தது என்றும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
நடிகை அஞ்சலி தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதன் காரணமாக தான் அஞ்சலி படங்களில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை அஞ்சலியே இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நடிகை அஞ்சலிக்கு நடிகர் ஜெய்யுடன் காதல் என கிசுகிசு பரவியது. இந்நிலையில் அந்த பேட்டியில் பேசியுள்ள அஞ்சலி, தனக்கு நிறைய நண்பர்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் தனக்கு இருந்த ஒரு ரிலேஷன்ஷிப் குறித்தும் பேசியிருக்கிறார் அஞ்சலி. தனக்கு ஒருவருடன் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் இருந்ததாக கூறிய அவர் அந்த நபர் யார் என்பதை கூற மருத்துவிட்டார்.