விவாகரத்து பெற்றாலும் நான் அவரை காதலிக்கிறேன்… மனம் திறந்த பிரபல நடிகரின் மனைவி!
Author: Udayachandran RadhaKrishnan18 January 2025, 1:34 pm
பிரபல நடிகருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்த நடிகை விவாகரத்து பெற்றாலும் அவரை காதலித்து வருவதாக கூறி நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
நடிகர் ராமராஜனை உருகி உருகி காதலித்தார் நளினி. ராமராஜனும் நளினிதான் தனக்கு மனைவியாக வர வேண்டும் என எதிர்ப்பையும் மீறி எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படியுங்க: மகனுக்காக ரவி மோகன் எடுத்த திடீர் முடிவு…ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்..!
ஆனால் 13 வருடங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி பிரிந்தனர். இவர்களுக்கு அருணா, அருண் என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் திருமண நிகழ்ச்சிகளுக்கு இருவரும் இணைந்து முன்னிலையில் நடத்தினர்.
ஏன் ராமராஜனுடன் மீண்டும் நீங்கள் இணைந்து வாழக்கூடாது என நளினியிடம் கேட்ட போது, இருவருக்கும் அந்த எண்ணம் தற்போது வரை இல்லை. அதே சமயம் ராமராஜனை நான் தூரத்தில் இருந்து காதலிக்கிறேன். இதுவும் நல்லாதான் இருக்கு. எப்போதும் அவரை நான் விட்டுக் கொடுக்க முடியாது. அதே போல அவரும் என்னை விட்டுக்கொடுக்க மாட்டார் என கூறினார்.