UNCONDITIONAL LOVE… கார் பந்தயத்திற்கு இடையே பேசிய அஜித் : சிலாகித்த ரசிகர்கள்! (வீடியோ)
Author: Udayachandran RadhaKrishnan11 January 2025, 2:42 pm
24H துபாய் கார் பந்தயத்திற்கு இடையில் அஜித் பேட்டி கொடுத்த வீடியோ வைரலாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார் சிறு வயது முதலே பைக், கார் ரேஸிங்கில் அதிக ஈடுபாடு கொண்டவர். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது கிடைத்த இடைவெளியை ரேஸிங்கில் பயன்படுத்துவார்.
இதையும் படியுங்க: AK-க்கு வாழ்த்து சொன்ன SK…வைரலாகும் சிவகார்த்திகேயனின் ட்விட்டர் பதிவு..!
அப்படித்ததான் பல படங்களில் நடிக்க முடியாமல் ரைடுக்கு கிளம்பிவிடுவார். ஆனால் அதற்கெல்லாம் இவருக்கு இப்போது பலன் கிடைத்து வருகிறது.
தற்போது கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் காட்டி வரும் அஜித். துபாய் 24H கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் இவர் கார் பயிற்யின் போது விபத்து ஏற்பட்ட காட்சி வெளியாகி ரசிகர்களை அதிர்சசிக்குள்ளாக்கியுள்ளது.
ஆனால் எந்த வித காயமுமின்றி சிரித்துக் கொண்டே அஜித் காரில் இருந்து வெளியான வீடியோக்கள் ரசிகர்களை புல்லரிக்க வைத்தது.
தற்போது AJITHKUMAR RACING TEAM கார் பந்தயத்தில் 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே அஜித்குமாரிடம் பேட்டி எடுக்கப்ப்டடது. அப்போது தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அஜித் கொடுத்த மாஸ் பதில்தான், என் ரசிகர்கள் மீது Unconditional Love வைத்துள்ளதாக கூறியது.
AK and his fans.
— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025
I love them un conditionally. pic.twitter.com/XA3pNbhn6S
இந்த வீடியோவை பார்த்து மகிழ்ச்சியடைந்த அஜித் ரசிகர்கள் இணையத்தில அதிகமாக பகிர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.