No மீன்ஸ் No… பட வாய்ப்புகள் போனாலும் பரவாயில்ல – அடம் பிடித்து சாதிக்கும் சாய் பல்லவி!

Author:
11 November 2024, 4:57 pm

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வரும் சாய்பல்லவி நடிப்பில் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரான். இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக வசூலிலும் விமர்சனத்திலும் சாதனை படைத்திருக்கிறது .

 sai pallavi

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்… எப்போதும் தான் நேர்த்தியான உடையான சேலை அணிந்து வருவது குறித்து சாய்பல்லவி மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது பிரேமம் படம் வெளியான சில நாட்கள் கழித்து என்னுடைய பழைய டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகியது.

அதில் நான் அணிந்திருந்த உடையை வைத்து நிறைய பேர் படுமோசமான கமெண்ட்ஸ்களை செய்தார்கள். அப்போதான் நான் முடிவு செய்தேன். உடலை காட்டில் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று. இதனால் தான் வாய்ப்புகள் குறைக்கிறது கவர்ச்சி காட்டினால் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றால் அப்படிப்பட்ட வாய்ப்புகளே எனக்கு தேவையில்லை.

sai-pallavi

பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை என்றாலும் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. என் நடிப்பு திறமையை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுப்பவர்களுக்காக மட்டும் நான் நடித்துவிட்டு போவேன் என சாய் பல்லவி கூறினார். மேலும் என் ரசிகர்களும் நான் சேலையில் இப்படி நேர்த்தியான உடைகளை அணிவதே விரும்புகிறார்கள். அப்படி இருக்கும்போது எனக்கு இன்னும் சௌகரியம் ஆகிவிட்டது எனவே ரசிகர்களுக்காக நான் தொடர்ந்து சிறந்த படங்களில் நடிப்பேன் என சாய் பல்லவி கூறினார்.

  • Vaadivaasal Tamil movie வாடிவாசலை விட்டு வெளியேறிய சூர்யா..வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்…!
  • Views: - 324

    0

    0