தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை ஆன ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார் .

இவர் சிவா மனசுல ஸ்ருதி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததற்காக 2012 ஆம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். தொடர்ந்து தமிழ் தெலுங்கில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் பாப்பா என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தது மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸானார்.
அதை எடுத்து தமிழில் ராஜதந்திரம், மாநகரம் ,சரவணன் இருக்க பயமேன் , ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் , மிஸ்டர் சந்திர மௌலி , சிலுக்குவார் பட்டி சிங்கம், கசடதபர ,தலைவி மற்றும் பார்ட்டி உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
தற்போது அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரெஜினா விடாமுயற்சி படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டார்.

அப்போது விடாமுயற்சி திரைப்படம் மிகவும் அழகாகவும் பிரம்மாண்டமாகவும் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு முன் நான் அஜித் சாரை சந்தித்தே கிடையாது. எல்லோரும் அவரை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். அதே போல் நானும் ஆசைப்பட்டேன். பார்த்த உடனே அவரைப் போல் ஒரு வசீகரமான நபரை என் வாழ்வில் நான் பார்த்ததே இல்லை என்று தான் எனக்கு தோன்றியது.
இந்த திரைப்படம் மிகச் சரியான நேரத்தில் வெளிவரும். இயக்குனர் மகிழ் திருமேனி சிறப்பாக படத்தை இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 90% திரைப்படம் ஹர்பஜனில் படமாக்கப்பட்டது. என்னுடைய கதாபாத்திரத்தில் பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன் என ரெஜினா அந்த பேட்டியில் கூறினார்.