அஜித் சார் அந்த படம் பண்ணதுக்கு கோடி நன்றி – கையெடுத்து கும்பிட்ட ஜோதிகா!
Author: Shree5 July 2023, 6:27 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகாச 90ஸ் காலகட்டத்தின் முடிவில் நடிக்க வந்து 2000களில் டாப் நடிகையாக கொடிகட்டி பறந்தார். இந்தி திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய ஜோதிகா, வாலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி, முகவரி என டாப் ஹீரோக்களுடன் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினி என டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடித்து கனவு தேவதையாக மாறினார்.
சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனிடையே, நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட நடிகர் சூர்யாவுடன் காதலில் விழுந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.
இருவீட்டாரின் சம்மதம் பெற்று திருமணம் செய்த இந்த நட்சத்திர தம்பதிக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்து வந்த பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்தார் ஜோதிகா. தொடர்ந்து தற்போது இந்தி படங்களில் நடிக்க முயற்சித்து சூர்யாவுடன் மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிகா பேட்டி ஒன்றில் அஜித் நேர்கொண்டப்பார்வை படத்தில் நடித்தது குறித்து பெருமையாக பேசியுள்ளார். அதாவது, இந்த மாதிரி படத்தில் நடிப்பதற்காகவே அவருக்கு நன்றி சொல்லணும். ஒரு மாஸ் ஹீரோவாக மார்க்கெட் உசத்தில் இருக்கும்போது கமர்சியல் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கணும் என்றுதான் மற்ற நடிகர்கள் யோசிப்பார்கள். ஆனால், அஜித் சமூகநலனில் அக்கறைகொண்டு இதுமாதிரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததை நினைத்து நான் ஒரு பெண்ணாக பெருமைப்படுகிறேன் என புகழ்ந்து பேசியுள்ளார் ஜோதிகா.