முதல் படம் எடுக்கும் போது 180 சிககெரட்டுகளை புகைத்தேன் : பகீர் கிளப்பிய பிரபல இயக்குநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2023, 4:02 pm

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் இவர்.

2007 -ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குநர் வெற்றிமாறன்.

அந்த படத்திற்கு பின் பல வெற்றி படங்கள் மற்றும் விருதுகளை வாங்கி குவித்த இவர், தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழுவினர் படக்குழுவினர் கடைசி நாள் ஷூட்டிங் போட்டோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வெற்றிமாறன், ” உடற்பயிற்சி கூடம் சென்று ஒர்கவுட் செய்வதனால் மட்டும் ஆரோக்கியமாக இருக்க முடியாத, நம் வாழ்க்கை முறையையும் மாற்ற வேண்டும்.

நான் காலேஜில் படிக்கும் போது ஒரு நாளைக்கு 70 சிகரெட் ஆவது அடிப்பேன். முதல் படம் எடுக்கும் போது ஒரு நாளைக்கு 170 – 180 சிகரெட் பிடித்திருப்பேன்.

இது தவறான விஷயம் என்பதை உணர்ந்த பிறகு, மருத்துவர்களின் ஆலோசனை படி புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தேன்.

இனி என்னுடைய திரைப்படங்களில் புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகள் முடிந்த அளவு தவிர்ப்பேன் என கூறியுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 400

    0

    0