வில்லன் ரோல்களில் நடிப்பதையே நிறுத்திட்டேன்… கோபத்தில் விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு!

Author: Rajesh
10 January 2024, 9:44 am

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.

ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

vijay sethupathi - updatenews360

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.

தற்போது பாலிவுட்டில் பிரபல நட்சத்திர நடிகையான கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாக marry christmas என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வரும் விஜய் சேதுபதி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரை வாழ்க்கை அனுபவத்தை குறித்து பேசினார்.

vijaysethupathy-updatenews360-3

அப்போது, நான் வளர்ந்து வரும் திறமையுள்ள பல இயக்குனர்களுக்கு உதவி செய்யும் விதமாக கெஸ்ட் ரோல்களில் நடித்து கொடுப்பேன். ஆனால், எதற்கெடுத்தாலும் அவரை கூப்பிடுங்க என்று நிறைய பேர் வருகிறார்கள். அந்த மாதிரி படங்களால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தோல்வி அடைந்துவிடுகிறது. இதனால் நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். இனிமேல் கெஸ்ட் ரோல்களில் நடிக்க கூடாது என முடிவெடுத்துவிட்டேன். அதே நேரத்தில் வில்லனாக நடிக்கவும் அதிகம் வாய்ப்புகள் வருகிறது. அதையும் நிறுத்திவிட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்து இருக்கிறார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!