பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் வாழ்க்கையின் வலிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் “வாழை”.
இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருந்தார். இந்த திரைப்படத்தை பார்த்த எல்லோருமே கண் கலங்கி மன வேதனையுடன் படத்தை பாராட்டினார்கள்.
இந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மனைவி குறித்தும் திருமண வாழ்க்கை குறித்த சீக்ரெட்டையும் உடைத்திருக்கிறார். அதாவது, நானும் என் மனைவியும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். ஆரம்பத்தில் என்னுடைய மனைவி வீட்டில் எதிர்ப்புகள் இருந்தது.
அதன் பிறகு இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் எங்களது திருமணம் நடைபெற்றது. ஆனால் எனக்கோ என் மனைவியை காதலித்து என் விருப்பப்படி தாலி கட்டாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. ஆனால் என்னுடைய மனைவியின் அம்மா தாலி கட்டி தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார்.
அதனால் தான் வேறு வழி இல்லாமல் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டேன். அதில் எனக்கு சுத்தமாக விருப்பமே இல்லை பிடிக்கவும் இல்லை. ஏனென்றால், என்னை போலவே என் மனைவிக்கும் தாலி கட்டி திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை.
இதையும் படியுங்கள்: கோட்டீஸ்வரர்களே கால் வைக்க நடுங்கும் பள்ளி…. தோனி மகளின் ஸ்கூல் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா?
என்னைப் பொறுத்தவரை ஒரு பெண்ணை காதலிக்கிறோம் அந்த பெண்ணை எப்படி திருமணம் செய்து கொண்டால் என்ன என்பதுதான் என்னுடைய எண்ணம். மனைவி திவ்யாவை திருமணம் செய்து கொள்ள மிக முக்கிய காரணமே அவரின் அப்பா அம்மா எல்லோருமே கலையை நேசிக்க கூடியவர்கள். கலையை நம்பினார்கள் என மாரி செல்வராஜ் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.