நான் விக்ரமை ரொம்ப டார்ச்சர் பண்ணேன் – இப்படி ஒரு சுயநலவாதியா பா. ரஞ்சித்?
Author: Shree1 November 2023, 7:01 pm
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷ நடிகரான விக்ரம் பல வித்யாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிரள வைப்பார். அப்படிதான் தற்போது ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்தில் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார்.
பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. தங்கலான் என்றால் ஊர் காவலன் என்று அர்த்தம். இரவு நேரங்களில் அந்த ஊரை சுற்றிவந்து அங்குள்ள மக்களின் பாதுகாவலனாக இருப்பதும், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக ஊர் தலைவருக்கு தகவலை சொல்வதே அவர்கள் வேலை.
தமிழ் பேசும் பறையர் இனங்களில் ‘தங்கலால பறையன்’ என்று ஒரு இனம் இருந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் இனத்தவர்களின் தலைவன், ஊர்க்காவலன், மக்கள் பாதுகாவலன், எல்லை வீரனாக இருப்பவர்களை தான் தங்கலான் என்று அழைத்துள்ளனர். இதில் விக்ரம் தங்கலானாக நடித்திருக்கிறார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மிரட்டலாக உருவாகியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் வருகிற நவம்பர் 1-ஆம் தேதி (இன்று) வெளியாகும் என ஏற்கனவே அறிவித்ததை போன்றே சற்றுமுன் இப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகிது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம்,
இந்த படத்தின் கதையை யோசிக்கும்போதே விக்ரமை நினைந்து தான் உருவாக்கினேன். அவர் நிச்சயம் இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச்செல்வார் என எனக்கு நம்பிக்கை இருந்தது. ஒருமுறை ஷூட்டிங்கில் விக்ரம் சாருக்கு விபத்து ஏற்பட்டது. அவர் ஒரு மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் மிகவும் கடினமான காட்சிகளில் நடிக்க கேட்டேன்.
என் விஷயத்தில் நான் ரொம்ப சுயநலவாதி. அது அவரால் முடியாது. கடினமான காட்சி என்று எனக்கே தெரியும். ஆனாலும் கூலாக கேட்டு நடிக்க வைப்பேன். விக்ரம் சாரும் பண்ணிடலாம் அது ஒன்னும் பிரச்சனை இல்லை என கூறுவார். அது தான் ஒரு சிறந்த நடிகருக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது என பா. ரஞ்சித் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.