நல்லவங்களா இருந்தாலே இப்படித்தான்… அவருடன் 100% உண்மையாக இருந்தேன், ஆனால் சமந்தா உருக்கம்!
Author: Shree31 March 2023, 2:53 pm
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதற்கு காரணமே ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்தது தான் என கூறப்பட்டது. விவாகரத்துக்கு பின்னர் ’புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா’ ஐட்டம் பாட்டுக்கு கவர்ச்சி டான்ஸ் ஆடியது மோசமான விமர்சனத்திற்கு உள்ளானது.
இது குறித்து சமீபத்தில் பேட்டில் சமந்தாவிடம் கேட்டதற்கு, “நான் விவாகரத்து குறித்து அறிவித்த சில நாள்களிலேயே ’புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா’ பாடலில் நடனமாட வாய்ப்பு வந்தது. அதை அறிந்ததும், `இந்த நேரத்தில் இப்படியான பாடலில் பங்கேற்க வேண்டாம், வீட்டிலேயே இரு’ என என் குடும்பத்தினர் மற்றும் என் நண்பர்கள் கூறினார்கள்.
அவங்க சொன்ன எல்லா அட்வைஸையும் கேட்டுக்கொண்ட நான், பின்னர் அந்த பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டேன். காரணம், நான் என் திருமண பந்தத்தில் 100% நேர்மையாகதான் இருந்தேன். ஆனால் அது எனக்கு சரியாக அமையவில்லை. அதுக்காக நான் ஏதோ தவறு செய்ததை போல், ஏன் ஓடி ஒளிய வேண்டும்? என்னை நானே துக்கத்தில் ஆழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியில் வந்தேன் என உருக்கமாக பேசியுள்ளார்.