சூர்யாவை கல்யாணம் பண்ண பயந்தேன்… காதல் ஸ்வாரஸ்யங்களை கூறிய ஜோதிகா!

Author: Rajesh
26 December 2023, 6:09 pm

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி கலக்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு பல கேள்விகளுக்கும் வதந்திகளுக்கு பதில் அளித்த ஜோதிகா, நான் சூர்யாவை திருமணம் செய்தபோது உண்மையிலே மிகவும் பயந்தேன். காரணம் வாடா இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டு குடும்பத்தில் மருமகள் ஆக ரொம்ப பயமா இருந்துச்சு. அது எல்லா பெண்களுக்கும் இருக்கும் பயம் தான்.

surya jyothika-updatenews360

இருந்தாலும் இது தான் இனி என் வீடு என்று நினைத்து காலடி எடுத்து வைத்தேன். அன்றிலிருந்து இன்றுவரை ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நல்ல குடும்பம் , நல்ல கணவர் என கடவுள் என்னை ஆசீர்வதித்துள்ளார். சூர்யா என்னை அவருக்கு சமமாக நடத்துவார். நான் சுமாராக தான் சமைப்பேன். ஆனால், அது சூர்யாவுக்கு ரொம்ப பிடிக்கும் என பல விஷயங்களை குறித்து வெளிப்படையாக பேசினார்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?