15 வருடம் பிரபல நடிகருடன் அப்படி ஒரு உறவில் இருந்த ஸ்ருதிகா – ஷாக்கிங் போட்டோ!

Author: Shree
6 July 2023, 2:38 pm

தமிழ் சினிமாவில் பெரிதாக பிரபலமாகாத நடிகையாக இருந்து பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிகா. இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். 2002ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஸ்ரீ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப்படம் அட்டர் பிளாப் ஆகி பெரிதாக பேசப்படவில்லை.

அடுத்தடுத்து தமிழில் ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார். இதனிடையே ஸ்ருதிகா அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இதையடுத்து கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமளவில் பிரபலமானார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல நடிகர் கலையரசன் உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு, என்னுடைய சிறந்த கல்லூரி நண்பர்கள் என கேப்ஷன் கொடுத்து, கேர்ள்ஸ் ஸ்கூலில் படித்த பிறகு நான் ஒரு co education கல்லூரியில் நுழைந்த நேரம், கல்லூரி நாட்களை என் வாழ்க்கையின் மிகவும் ஜாலியான பொன்னான நாட்களாக மாற்றியது இந்த இரண்டு நட்பு தேவதைகள் தான்.

அவர்கள் என்னுடன் இருந்தபோது என்னை மிகவும் பத்திரிகமாக, பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார்கள். ஆனால், அவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறியதும் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அவர்கள் இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியேற எனக்கு மேலும் 2 வருடங்கள் இருந்தது.. ஆனால், அவர்கள் அந்த வெற்றிடத்தை உணர விடவில்லை. ஆம் 5 வருடங்களுக்கு முன்பு வரை நாங்கள் ஒன்றாக சந்தித்து ஜாலியான நேரத்தை கழித்துள்ளளோம்.

பின்னர் வாழ்க்கை மிகவும் பிஸியாக மாறியது, எங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்த வேலைகள் இருந்தன, 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் நேற்று சந்தித்தோம். எதுவும் மாறவில்லை !!! அதே பைத்தியக்காரத்தனமான அன்பு !! ஒருவரையொருவர் அடித்து, ஒருவரையொருவர் கேலி செய்து, சிரித்து மகிழ்ந்த தருணம். 15+ வருட நட்பு மற்றும் இன்னும் நிறைய வரவிருக்கிறது என நட்பை விவரித்து கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ