மீனாவின் அழகை பார்த்து நான் மயங்கிட்டேன் – மேடையில் வெட்கத்துடன் கூறிய ரஜினிகாந்த்!

Author: Shree
12 April 2023, 4:25 pm

1982ஆம் ஆண்டு நெஞ்சங்கள் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை மீனா. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

இந்நிலையில் மீனா 40 ஆண்டு கால சினிமா பயணம் குறித்து நடைபெற்ற கௌரவ விழாவில் பேசிய ரஜினிகாந்த், குழந்தை மீனாவுடன் நடித்துவிட்டு அவருக்கு ஜோடியாக நடித்தபோது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துக்க்கொண்டார். அதில்,

anbulla rajinikanth - updatenews360

எஜமான் திரைப்படம் பண்ணலாம்னு சொல்லி ஏவிஎம் ஸ்டுடியோவில் டிஸ்கஷன் போயிக்கொண்டிருந்தது. அப்போது யார் ஹீரோயினா போடலாம் என என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் சில ஹீரோயின் பெயர்களை கூறினேன். பின்னர் “மீனா” என கூறினார்கள். அதை கேட்டு நான் அப்படியே நான் ஷாக் ஆகிட்டேன். மீனாவா? எந்த மீனா? என மறுபடியும் கேட்டேன்.

ejaman rajinikanth - updatenews360

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்த அதே மீனா தான் என்றார்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பின்னர், மீனா தெலுங்கில் நடித்த இரண்டு பாடல்களை எனக்கு திரையிட்டு காட்டினார்கள். அதை பார்த்து நான் ஆடிபோயிட்டேன். நான் பார்த்த அமுல் பேபி மீனாவா இது? என ஷாக் ஆகிட்டேன். அவ்ளோவ் அழகு அவ்வளோவ் charming… நான் அவங்க அழகை பார்த்து அசந்துட்டேன். அதன் பின்னர் படப்பிடிப்பில் என்னை பார்த்தாலே வெட்கப்பட்டு ஓடிடுவாங்க மீனா. பின்னர் கடைசியாக அவங்களே பேசினாங்க என்றார். இதை கேட்டதும் மீனாவுக்கு வெட்கம் வெட்கமா வந்துடுச்சு…!

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 2805

    44

    16