வேட்டையனாக நடிக்க பயந்த ராகவா லாரன்ஸ்… சந்திரமுகி 2 பார்த்து நடுங்கி விட்டாராம்!

Author: Shree
26 August 2023, 12:00 pm

தமிழ் சினிமாவில் வெளிவந்த பேய் படங்களுக்கே தலைவர் ” சந்திரமுகி’ படம் தான். 2005ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மரணபீதியிலும் மகழ்ச்சி அடையவைத்தது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் 250 நாட்களையும் கடந்து, இத்திரைப்படம் 650 கோடி வரை வசூலை ஈட்டி திரையரங்குகளில் ஓடி மாபெரும் சாதனையை படைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி.கே. எம். தமிழ்குமரன் தலைமை வகிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

அதிக பொருட்செலவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளிடையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் விநாயகர் சதுர்த்தியன்று‌ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், இப்படத்தின் ஆரம்பிப்பதற்கு முன்னரே தலைவர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்று தான் துவங்கினோம். முழுக்க முழுக்க ரஜினியின் ஆசியுடன் தான் படம் எடுத்துள்ளோம். இசை வெளியீட்டிற்கு வருவதற்கு முன்னதாகவும் அவருடன் பேசினேன்.

இப்படத்தில் வேட்டையன் கேரக்டரில் நடித்தபோது மிகுந்த பயம் இருந்தது. சந்திரமுகி படத்தில் ரஜினி வேட்டையன் கேரக்டரை சிறப்பாக செய்திருந்தார். அந்த ரோலில் நான் நடித்து அவரது பெயரை கெடுத்துவிடக்கூடாது என நினைத்து பயந்து பொறுப்புடன் நடித்துள்ளேன். மேலும் சூப்பர்ஸ்டாரின் ஆசியுடன் படம் சிறப்பாக நிறைவடைந்துள்ளது என கூறி ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி