எம்ஜிஆர், ஜெ.,வுக்கு சேரும் கூட்டத்த பாத்திருக்கேன்.. ஆனா விஜய்க்கு வந்த கூட்டம் இருக்கே : பிரபலம் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan7 March 2025, 11:28 am
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளார்.
கட்சியை தொடங்கி, கொள்கை கோட்பாடுகளை அறிவித்த விஜய், தனது கடைசி படம் என ஜனநாயகன் படத்தை அறிவித்துள்ளார். இந்த படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
அரசியலில் நுழைந்துள்ள விஜய் அவரது ரசிகர்கள் ஏராளமான வரவேற்பை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக முதல் மாநாட்டில் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்டத்தை பார்த்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரபல நடிகர் ராதாரவி, விஜய்க்காக ஒன்றுதிரண்ட கூட்டத்தை குறித்து பேசியுள்ளார். பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், எம்ஜிஆருக்கு கூட்டத்தை சேர்ந்ததை பார்த்திருக்கேன், ஜெயலலிதாவுக்கு கூட்டம் கூடியதை பார்த்திருக்கிறேன், ஆனால் விஜய்க்கு கூடிய கூட்டத்தை பார்த்து மிரண்டுவிட்டேன்.
ராதாரவியின் இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் அதிகமாக இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.
Makkalin Thalaivan ❤️ 💛 ❤️ 🙏🏽 #தமிழகவெற்றிக்கழகம்
— TVK ❤️💛❤️ தளபதி Kasthuri ❦︎❥꧁ (@Kasthurirajand1) March 6, 2025
@TVKVijayHQ 👑 @actorvijay 👑 #JanaNayagan
pic.twitter.com/Kn2IsspZ08