கர்நாடககாரர்கள் சும்மா இருக்க மாட்டாங்க.. இதோட நிறுத்திக்கோங்க.. சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த விஜயலட்சுமி..!
Author: Vignesh22 September 2023, 12:15 pm
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்று பெங்களூர் சென்ற நிலையில், சீமானை எச்சரிக்கும் விதமாக தற்போது அவர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சீமான் என்கிட்ட 1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போட்டதிலிருந்து நான் கதறிக்கிட்டு இருக்கிற மாதிரி அவங்களோட youtube சேனல்கள் செய்தியை போடுறாங்க… சீமானுக்கும் கருணை கிடையாது. அவருடைய youtube சேனல்களுக்கும் கருணை கிடையாது.
2008 ஆம் ஆண்டு என்னுடைய அக்கா பிரச்சினை தீர்க்குறதுக்கு தான் சீமான் கிட்ட போனேன். ஆனா, அவர் எனக்கும் என்னோட அக்காவுக்கும், நன்மை செய்யல.. பெங்களூர்ல எங்களோட வாழ்க்கையை நாங்க தான் பாத்துக்கணும். எந்த சீமானும் வரப்போவதில்லை. எல்லாத்தையும் முடிச்சுட்டு உங்க முகத்தை பார்க்க கூடாதுன்னு தான் பெங்களூருக்கு வந்து இருக்கேன். இத்தோட நீங்க எல்லாத்தையும் விட்டுட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது.
நடிகைர் ஜகேஷ் கூட எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சீமான் சொல்றாரு, இதுக்கு சீமான் மேல 20 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கு போடுவேன். எனக்கும், ஜகேஷ் சாருக்கும் கல்யாணம் ஆயிருச்சுன்னு சொன்னா கர்நாடகக்காரர்கள் சும்மா இருக்க மாட்டாங்க, இன்னும் என்னை பற்றி அவதூறு பரப்பும் வகையில் சீமான் பேசிட்டு செயல்பட்டு வந்தா அவரை, தூங்க கூட விடாமாட்டேன், ஆதாரங்களை வெளியிடுவேன்.
இதுக்கு மேல ஏதாவது வாலாட்டனா கர்நாடகத்துக்கு சீமானை வரவைச்சு திணறடிப்பேன். எல்லாத்தையும் இதோட நிறுத்திக்குங்க, என்று சீமானுக்கு எச்சரிக்கை விடும் விதமாக விஜயலட்சுமி வீடியோவை வெளியிட்டுள்ளார்.