சிவகார்த்திகேயன் ஹீரோ ஆகலன்னா நான் என் பெயரை மாத்திக்கிறேன் – சவால்விட்ட பிரபல நடிகை!

Author: Shree
21 August 2023, 2:05 pm

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பையும் தாண்டி தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார். மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை நினைந்து பெருமையாக பேசியுள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி இமாலய வெற்றி அவர் ஹீரோ ஆகலன்னா நான் என் பெயரை மாற்றிக்கொள்கிறேன் என கூறியிருந்தேன். அந்த அளவிற்கு திறமையானவர் சிவகார்த்திகேயன் என ரம்யா கிருஷ்ணன் பெருமையாக கூறியுள்ளார்.

  • Mersal Film is Flop or hit Says Producer Hema Rukmani மெர்சல் படம் தோல்வியா? தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் பதில் : வெளியான வீடியோ!