கவர்ச்சி நடிகை ஆக தென் இந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வலம் வந்தவர் தான் நடிகை நமீதா. 2002 ஆம் ஆண்டில் சொந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து சினிமா துறைக்கு அறிமுகமானார். அதை எடுத்து தமிழில் எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலமாக நடிகை நமீதா என்ட்ரி கொடுத்தார்.

இவர் ஒவ்வொரு திரைப்படங்களும் தூக்கலான கவர்ச்சியை காட்டி கொழுக் மொழுக் லுக்கில் ஐட்டம் டான்ஸ் ஆடியதால் வெகு சீக்கிரத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இவர் பார்க்கப்பட்டார். மேலும் கொஞ்சும் தமிழில் தமிழ் ரசிகர்களை மச்சான் என கூறி ஒட்டுமொத்த இளவட்டத்தையும் வசீகரித்து இழுத்து விட்டார் .
இதனிடையே நடிகை நமீதா தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் காதலரும் ஆன வீரேந்திர சௌந்தரி என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதை எடுத்து இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு நடிகை நமீதா திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் .

மேலும் தற்போது அரசியலில் அதிக ஆர்வம் செலுத்தி அதில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள நமீதா…. எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து ரெண்டு வருஷம் ஆகிடுச்சு.
இப்போ மறுபடியும் படங்களில் நடிக்க ஆர்வமா தயாராக இருக்கேன். ஒரு படத்துல கூட நான் இப்போ வில்லியாக நடிச்சிட்டு வரேன். ஆனால், இனிமே கவர்ச்சி ரோலில் நிச்சயமா நடிக்கவே மாட்டேன். அதுக்கான காரணம் குழந்தை குடும்பம் என ஆகிவிட்டது இனிமேல் பொறுப்புடன் இருக்க விரும்புகிறேன் என நமீதா கூறியிருக்கிறார்.