ரசிகர்களை மதிக்க தெரியாத அஜித்தை நான் மதிக்கமாட்டேன்.. பிரபல தயாரிப்பாளர் விளாசல்.. வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2022, 10:03 am

அஜித் தற்போது நேர்கொண்டப்பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத்தின் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகின்றார்.

நேர்கொண்டப்பார்வை திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே துணிவு திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் இருக்கின்றார் அஜித்.

சமீபத்தில் துணிவு படத்திலிருந்து சில்லா சில்லா என்ற பாடல் வெளியாகி வைரல் ஹிட்டானது. இந்நிலையில் இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது

அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் அதே தினத்தில் வெளியாகின்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜில்லா மற்றும் வீரம் படங்களை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றது. இதன் காரணமாக ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித் தொடர்ந்து பாலிவுட் திரையுலகை சேர்ந்த போனி கபூரின் தயாரிப்பில் நடிப்பதும், தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கு அவர் வாய்ப்பு தரவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.

இது குறித்து சமீபத்தில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், இதைப்பற்றி அவரிடம் எப்படி பேச முடியும். அவர் வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தால் தானே பேசமுடியும்.

வீட்டிலிருந்து ஸ்டுடியோவிற்கு செல்வது, படப்பிடிப்பு முடிந்தவுடன் ஸ்டுடியோவிலிருந்து வீட்டிற்கு வருவது. அவரை வாழ வைக்கும் ரசிகர்களை கூட அவர் சந்திப்பதில்லை மதிப்பதில்லை.

அவ்வாறு இருக்கும் நடிகர்களை நான் மதிக்கமாட்டேன் என கடுமையாக பேசியுள்ளார் கே.ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 643

    2

    0