இந்த ஹீரோஸ் கிட்ட நைட் 10 மணிக்கு மேல பேசுவேன்.. தயக்கமின்றி சொன்ன கீர்த்தி சுரேஷ்..!

Author: Rajesh
25 June 2023, 11:50 am

பிரபல நடிகையின் மகளான கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை, 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

keerthy suresh - updatenews360

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்சமயம் தெலுங்கு சினிமாக்களில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

keerthy suresh - updatenews360

இதற்காக நிறைய பேட்டிகளில் அவ்வப்போது பங்கேற்று வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் அவரிடம், இரவு 10 மணிக்கு மேல் யாருடன் வெகுநேரம் பேசுவீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு எந்த வித தயக்கமுமின்றி பதிலளித்த கீர்த்தி சுரேஷ், நடிகர் உதயநிதியுடன் இரவு பேசுவேன், தெலுங்கு நடிகர் நானியுடன் அடிக்கடி பேசுவேன் என கூறியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!