தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர ஹீரோவாக இருந்து வந்த நடிகர் விஜய். இவர் தற்போது அரசியலில் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்கி இருக்கும் நடிகர் விஜய் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் .
தொடர்ந்து அடுத்தடுத்து அரசியல் வேலைகளில் படு பிசியாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த நடிகை வனிதாவிடம் பத்திரிக்கையாளர் சூழ்ந்து கொண்டு நடிகை விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் எந்த அளவுக்கு சோபிப்பார் என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு நான் விஜய்க்கு அனைத்து வகையிலும் வாழ்த்துகிறேன். அரசியல் என்ற மிகப்பெரிய பரிமாணம் எடுத்துள்ளார். நான் எனது ஆழ்மனதிலிருந்து நடிகர் விஜய்க்கு வாழ்த்து சொல்கிறேன். கண்டிப்பாக அவர் பெரிய வெற்றி அடைய வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.
அதன் பிறகு நீங்கள் சினிமா துறையில் உள்ளீர்கள் உதயநிதியும் விஜய்யும் இரண்டு பேருமே சினிமா துறையில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால் இரண்டு பேரும் அரசியல் எதிரி என்று பேசுகிறார்களே அது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என வனிதாவிடம் கேட்க…. அரசியல் என்ற வகையில் எல்லாமே சரிதான் இரண்டு பேரும் நண்பர்கள் தான் இதை எடுத்து இருவரில் யாருக்கு சப்போர்ட் என கேள்வி கேட்டதற்கு “நல்ல தமிழகம் அமைய யார் வந்தாலும் நான் சப்போர்ட் செய்வேன்” என சர்ச்சையில் சிக்காமல் நாசுக்காக பதிலளித்துவிட்டு எஸ்கேப் ஆனார் நடிகை வனிதா.