புடி புடி நல்லா காக்கா புடி…. சம்பளமே கொடுக்கலன்னாலும் அவருக்காக நடிச்சிருப்பேன்- விஜய் சேதுபதி!

Author: Shree
16 July 2023, 5:19 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார். ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார். ஹீரோ கேரக்டர் விட வில்லன் ரோலில் சைலண்டா வெளுத்து வாங்குவார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது அட்லீ இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார்.

இது குறித்து சமீபத்தில், ஷாருக்கானுக்கு வில்லனாக நடிப்பதற்கு ரூ. 21 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறீர் என செய்திகள் வெளியாகியுள்ளதே அது உண்மை தானா? என கேட்டதற்கு, ‘நான் ஷாருக் கானுக்காக தான் இந்த படத்தில் நடித்தேன். அவங்க சம்பளமே கொடுக்கவில்லை என்றால் கூட நான் இதில் நடித்து இருப்பேன்’ காரணம் ஷாருக்கான் தான் என தெரிவித்து இருக்கிறார். இதனை பார்த்த சில கோலிவுட் குசும்பன்ஸ் ” புடி புடி நல்லா காக்கா புடி” அப்போதானே நார்த்திகன்ஸ் படத்துல தொடர்ந்து நடிக்கமுடியும் என விமர்சித்துள்ளனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!
  • Close menu