இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்துக்கொண்டிருக்கிறார். இவர் பல்வேறு இந்தி படங்களில் நடித்து அந்த உச்ச அந்தஸ்தில் இருந்து வருகிறார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான அவர், மூன்று ஃபிலிம்பேர் பரிந்துரைகளுடன் கூடுதலாக நான்கு ஸ்க்ரீன் விருதுகள் மற்றும் நான்கு ஜீ சினி விருதுகள் உட்பட பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
கத்ரீனா கைஃப்பின் அழகு மற்றும் நடிப்புக்கான வரவேற்பு வேறுபட்டிருந்தாலும், அவர் தனது அதிரடித் திரைப்படப் பாத்திரங்களுக்காகவும், பல்வேறு வெற்றிகரமான அவரது நடனத் திறனுக்காகவும் கோடிக்கணக்கில் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது தமிழ் நடிகர் விஜய் சேதுபதியுடன் merry christmas என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீராம் ராகவண் இயக்கியுள்ள இப்படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தை ராதிகா ஆப்தே, ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கத்ரீனா கைஃப் தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் விஜய் குறித்து தொகுப்பாளர் கேட்டதும், “தளபதியை தானே சொல்றீங்க…? அவரு தளபதி விஜய்” என க்யூட்டாக கூறினார். தொடர்ந்து பேசிய கத்ரீனா கைஃப்… நான் விஜய்யுடன் கோக்கோ கோலா விளம்பரத்தில் நடித்துள்ளேன். அப்போது விஜய்யுடன் ஈடுகொடுத்து டான்ஸ் ஆட ரொம்பவே கஷ்டமாக இருந்தது. அவர் டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. அன்று முதல் நான் விஜய்யின் ரசிகையாகவே மாறிவிட்டேன் என மிகுந்த மகிழ்ச்சியோடு பேசினார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.