தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.
இதனிடையே ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அது உண்மையில்லை கட்டுக்கதை என்பது விசாரணையில் தெரியவந்தது. தினேஷிடம் இருந்து விவாகரத்து வாங்க நாடகம் ஆடியதாக செய்திகள் வெளியானது. தினேஷ் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ நினைத்தாலும் ரக்ஷிதா அவரை ஏற்றுக்கொள்வதாகவே தெரியவில்லை.
பின்னர் தினேஷ் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது பிரிந்து சென்ற மனைவி ரக்ஷிதா குறித்து பல முறை பேசியிருக்கிறார். தினேஷ் எப்படியாவது ரக்ஷிதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசையை தான் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். அதன் வகையில் பிக்பாஸில் இருந்து வெளியில் வந்ததும் ரக்ஷிதாவை சந்தித்து மீண்டும் சேருவது குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியது.
ஆனால் ரக்ஷிதா அவருடன் சேர்ந்து வாழும் எண்ணத்திலே இல்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கணவர் இல்லாமல் வாழும் பெண்கள் குறித்து அவர் பேசியதாவது, கணவர் இல்லை என்றால் எப்போதும் அழுது கொண்டே கவலையுடன் இருக்க வேண்டும் என்பது விதி அல்ல. பிடிக்காத ஒரு நபருடன் தொடர்ந்து வாழ்வதுதான் வேதனையானது. உடனடியாக ஒரு முடிவு எடுத்து அவரை பிரிந்து விட்டு மகிழ்ச்சியாக இருப்பது எந்த குற்றமும் இல்லை என தனது கருத்தை தைரியமாக முன்வைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
This website uses cookies.