விஜய்க்கு தங்கையாக நானா? ஆளவிடுங்க… தளபதிக்கே டாட்டா காட்டிய இவானா!

Author: Rajesh
6 December 2023, 6:31 pm

கேரளாவை சேர்ந்த இளம் நடிகையான இவானா தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜோதிகா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான நாச்சியார் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

thalapathy 68

அதன் பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தில் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். அந்த படம் இவரது கெரியரை உச்சத்தில் நிறுத்தியுள்ளது. தொடர்ந்து கள்வன் , LGM உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்திருந்தார்.

thalapathy 68

LGM படத்தை தோனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவானாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க தளபதி 68 படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

iavana

ஆம், அப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைக்க அதை இவானா வேண்டாம் என கூறி நிராகரித்துவிட்டாராம். காரணம் இப்போது ஹீரோயின் என்ற பிராண்டில் வளர்ந்துக்கொண்டிருக்கிறேன். இந்த சமயத்தில் தங்கை ரோலில் நடித்தால் அடுத்தடுத்து அதுபோன்ற வாய்ப்புகள் மட்டுமே தேடி வரும். எனவே என்னதான் விஜய் படமாக இருந்தாலும் வேண்டாம் என கூறிவிட்டாராம். விஜய் படத்தில் முகம் தெரியாத ரோலாக இருந்தாலும் ஓகே என காத்துக்கிடக்கும் நபர்களுக்கு மத்தியில் கிடைத்த வாய்ப்பை இப்படி வீணடித்துவிட்டாரே இவானா என நெட்டிசன்ஸ் புலம்பி தள்ளியுள்ளனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்