ரஜினியிடம் அதை எதிர்பார்க்கும் தனுஷ்?… விவாகரத்து செய்யாததற்கு இதுதான் காரணமாம்..!

Author: Vignesh
17 June 2023, 10:45 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கழித்து யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர்.

இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியதோடு அதற்கான காரணம் என்னவென்று கூறாமல் இருந்ததால் பல்வேறு சர்ச்சைகளும் பல்வேறு காரணங்களும் பரப்பப்பட்டது.

இதனிடையே, ஒரு சிலர் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கம் காட்டியதாகவும், சில நடிகைகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் இப்படி தனுஷ் நடந்து கொள்கிறார் என்று கூறியதாக பல குற்றச்சாட்டை பலவிதமாக கூறியதாகவும், கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கப்பட்டது.

முன்னதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து மட்டுமே வாழ்கிறார்கள் இன்னும் சட்டப்படி விவாகரத்துக்கு அணுகவில்லை என்று பிரபல பத்திரிகையாளர் தற்போது தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு முக்கிய காரணமாக தனுஷ் பெரிய பிளான் போட்டுள்ளதாகவும், ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து விட்டால் எங்கே சொத்து எல்லாம் பறிபோய் விடுமோ என்ற நோக்கத்தில் விவாகரத்து வேண்டாம் என்று கூறியிருப்பதாகவும், ஆனால் ஐஸ்வர்யா எவ்வளவோ வற்புறுத்தியும் விவாகரத்து வேண்டும் என கூறியும், தனுஷ் கொடுக்காமல் இழுத்து அடித்து வருவதாகவும், இதற்கு முழு காரணம் சொத்துக்கு ஆசைப்பட்டு தான் என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!