வெளிநாட்டில் வியாபாரத்தை தொடங்கிய”இட்லி கடை”…தனுஷ் போட்ட பக்கா பிளானை பாருங்க..!

Author: Selvan
9 January 2025, 1:54 pm

வெளிநாட்டில் பல கோடிக்கு விற்பனையான “இட்லி கடை”

நடிகர் தனுஷ் நடிப்பதை தாண்டி இயக்குனர்,தயாரிப்பளார்,பாடகர் என பல துறைகளில் ஜொலித்து,ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் தற்போது அடுத்தடுத்து படங்களை இயக்கி,நடித்து ரொம்ப பிஸியாக வலம் வருகிறார்.

Idli Kadai foreign market buzz

அந்தவகையில் சமீபத்தில் இவருடைய இட்லி கடை படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதியும் அறிவித்தார்.இப்படத்தில் தனுசுடன் நித்யாமேனன்,ராஜ்கிரண்,அருண் விஜய் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக தேனியில் நடைபெற்று கொண்டிருக்கும் போது தனுசுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஷூட்டிங்கை படக்குழு தள்ளி வைத்துள்ளனர்.

இதையும் படியுங்க: இதுக்கெல்லாம் அழலாமா…சினிமான சில அடிகள் விழ தான் செய்யும்…பிரபல நடிகரை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்…!

இந்த நிலையில்,தற்போது இட்லி கடை படத்தின் வெளிநாட்டு உரிமை குறித்த தகவல் வந்துள்ளது.அதாவது இப்படத்தின் வெளிநாட்டு உரிமம் 12 கோடி கொடுத்து ஒரு நிறுவனம் வங்கியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.இதற்கு முன்பாக இவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் வெளிநாட்டில் 8 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு,25 கோடி வசூலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!